சிவசைலம் கோயிலில் புத்தாண்டு வழிபாடு
ஆழ்வார்குறிச்சி : சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் கோலாகலமாக நடந்தது. ஆங்கில புத்தாண்டு நாளன்று சிவசைலம் சிவசைலநாதர் - பரமகல்யாணி அம்பாள் கோயிலில் காலையில் விநாயகர், முருகர், நந்தி, சுவாமி, அம்பாள் உட்பட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், விசேஷ பூஜைகளை நாரம்புநாதபட்டர், அப்புநாதபட்டர் நடத்தினர். சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்ய வந்ததால் கூட்டம் அலைமோதியது. காலை, மதியம் கீழாம்பூர் உமாசங்கர் குடும்பத்தினரால் சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆழ்வார்குறிச்சி வரம்தரும் விநாயகர், சந்தி விநாயகர், பாலவிநாயகர், தெப்பக்குளம் பெரியதளவாய் மாடசாமி கோயில், முப்புடாதி அம்மன் கோயில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், பூதம்மன் கோயில், சாலை இசக்கியம்மன் கோயில், வடக்குவாச்செல்வி அம்மன் கோயில், சுடலைமாடசாமி கோயில், கடையம் வில்வவனநாதர்- நித்யகல்யாணி அம்பாள் கோயில், கைலாசநாதர்-பஞ்சகல்யாணி அம்பாள் கோயில், முப்புடாதியம்மன் கோயில் உட்பட சுற்றுவட்டார கோயில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், கருத்தப்பிள்ளையூர் உட்பட கடையம் வட்டாரத்திலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடந்தது.