பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ADDED :2799 days ago
பழநி:பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு, சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில், யாகசாலை அமைக்கப்பட்டு புனிநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க வருடாபிஷேக சிறப்பு யாகபூஜை நடந்தது. உச்சிகாலபூஜையில் மூலவர் தண்டாயுதபாணிக்கு புனித கும்பநீர் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. இதைப்போல பழநி அடிவாரம் வனதுர்க்கை அம்மன், மேற்கு கிரிவீதி துர்க்கை, பாதவிநாயகர் கோயில்களில் வருடாபிஷேகம் சிறப்புபூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.