ராமநவமி மகோற்சவம் : பக்தர்கள் சிறப்பு வழிபாடு
ADDED :2796 days ago
சென்னை: ராமநவமி மகோற்சவத் முன்னிட்டு, ஆஞ்சநேயர், பெருமாள் கோவில்களில் நேற்று, சிறப்பு வழிப்பாடு நடைபெற்றது. விஷ்ணுவின் அவதாரமான, ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் பண்டிகை, ராம நவமி. இந்த ஆண்டு, ராமநவமி உற்வசம், நேற்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இத்தினத்தை முன்னிட்டு, பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்களில், 10 நாட்கள் உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு நேற்று, சென்னை, கோயம்பேடு, கனகவல்லித் தாயார் சமேத வைகுண்ட வாசப் பெருமாள் கோவிலில், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நங்கநல்லுார் ஆஞ்சநேயர் கோவிலில், லட்சார்ச்சனை நடந்தது.