உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநவமியை முன்னிட்டு சேலம் பெருமாள் கோவில்களில் பூஜை

ராமநவமியை முன்னிட்டு சேலம் பெருமாள் கோவில்களில் பூஜை

சேலம்: ராமநவமியை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது. ராமர், பூமியில் அவதரித்த நாள், ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, சேலம், கோட்டை, அழகிரிநாதர் கோவிலில், நேற்று காலை, 5:00 மணிக்கு, பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, ஆஞ்சநேயர், ராமர், சீதா, லட்சுமணன் ஆகிய சுவாமிகளுக்கு, சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, ராஜ அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோல், சின்னக்கடை வீதி வரதராஜ பெருமாள், செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள், வீராணம் லட்சுமி நரசிம்மர், ஆத்தூர் கோட்டை பெருமாள் உள்பட, மாவட்டம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில், சிறப்பு வழிபாடு நடந்தது.

* சேலம், ஏற்காடு சாலையிலுள்ள சாய்பாபா கோவிலில், காலை முதல், பல்வேறு வகை திரவியங்களால் அபி ?ஷகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பஜனை, ஆரத்தி, மஹா தீபாராதனை, சந்தனகாப்பு, சாய்பாபா திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !