உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் தபோவனத்தில் ராமநவமி விழா உற்சவம் கொண்டாட்டம்

சாய் தபோவனத்தில் ராமநவமி விழா உற்சவம் கொண்டாட்டம்

நாமக்கல்: நாமக்கல் அடுத்த கீரம்பூர் அருகே தொட்டிப்பட்டியில், சாய் தபோவனத்தில் சாய் பாபாவின் ஜெயந்தி விழா, ராமநவமி விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அதிகாலை, 5:00 மணிக்கு ஆரத்தி, 7:00 மணிக்கு, மங்கள ஸ்நான அபிஷேகம், 8:00 மணிக்கு நைவேத்தியம், ஆரத்தியும், 8:30 மணிக்கு, வஸ்திர பூஜை நடந்தது. 9:00 மணிக்கு, சாவடி பாபா பூஜை, சாயி துலாபார பூஜை, ரத பூஜை, 10:00 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, ஆரத்தி, நைவேத்தியம், திருமணம் மற்றும் குழந்தைபேறு வேண்டி கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், சுவாமியை வழிபட்டனர். ஏற்பாடுகளை, சாய் தபோவன சீரடி சாய்பாபா வழிபாட்டு மன்ற அறங்காவலர் குழுவினர், பக்தர்கள் செய்தனர்.

* குமாரபாளையத்தில் உள்ள, ராமர் கோவில், பெருமாள் கோவில்களில், சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர்.நகர் பாபா கோவிலில், நேற்று அதிகாலை கணபதி ஹோமம் நடந்தது. கூடுதுறை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. சித்தோடு சத்யா சாய் பஜன் மண்டலி சார்பாக, சிறப்பு பஜனை நடந்தது. விட்டலபுரி ராமர் கோவிலில் இருந்து, பாபா கோவில் வரை சந்தனகுட ஊர்வலம் மேள, தாளங்கள் முழங்க, வாண வேடிக்கையுடன் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !