நல்ல மணவாழ்க்கை அமைய...
ADDED :3120 days ago
நல்ல மணவாழ்வு வேண்டுவோர் சிவபார்வதி திருமணம் நடந்த பங்குனி உத்திர நாளில், சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்ளலாம். ஓம் சிவாயநம, ஓம் பராசக்திநம என்ற நாமத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மதியம் மட்டும் உணவு உண்ணலாம். இயலாதவர்கள் காலை, இரவில் பால், பழம் சாப்பிடலாம். இரவில் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும்.