சாத்தூர் மாரியம்மன் பொங்கல் விழா
சாத்துார் : சாத்துார் முக்குராந்தல் ஸ்ரீமாரியம்மன், ஸ்ரீகாளியம்மன் கோயில்களில் பொங்கல் விழா நேற்று முன்தினம் துவங்கியது. பங்குனி பொங்கல்விழா நேற்று முன்தினம் காலை 7:41 மணிக்கு அம்மனுக்கு காப்புகட்டுதலுடன் துவங்கியது.இதனை தொடர்ந்து தினமும் இரவு 7:55 மணிக்கு பல்வேறு மண்டகப்படியார்கள் சார்பில் அம்மன் ரிஷபம், சப்பரம், குதிரை, சிம்மவாகனங்களில் வீதியுலா நடைபெறும். முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்ரல் 1ல் நடைபெற உள்ளது.அன்றுமாலை 6:00 மணிக்கு மேல் வைப்பாற்றில் இருந்து கரகம் எடுத்தல், பொங்கல் விழா மற்றும் காளியம்மன் கோயில் முன் பூக்குழி இறங்குதல் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா இசக்கிமுத்து மற்றும் மண்டகப்படியார்கள், விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.காப்புகட்டிதுவக்க விழாவில் முக்கிய பிர முகர்கள் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.