பங்குனி பவுர்ணமி வலம்
ADDED :2794 days ago
சிவனின் மலைக் கோயில்களில் ஓசூரு சந்திரசூடேஸ்வரர் கோயில் பிரசித்தம். புராதன காலத்தில் இத்தலம் செண்பக வனமாக இருந்தது. கிழக்கு எல்லையில் இருந்து மலையேறினால் கோயிலை அடையலாம். நந்தியம் பெருமானின் அம்சமாக திகழும் இம்மலையில் சிவன், உடும்பு வடிவத்தில் தேவிக்கு காட்சியளித்தார். இவருக்கு “கவுதேயாத்ரி” என்றும் பெயருண்டு. அம்மன் மரகதவல்லி என்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள். பங்குனி பவுர்ணமியன்று சுவாமியும் அம்மனும் மலை சுற்றி வருவர்.