உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் கல்வி வழிபாடு

திருப்பதியில் கல்வி வழிபாடு

புராணங்களில் திருப்பதிமலை வராக க்ஷேத்திரம் எனப்படுகிறது. சுவாமி புஷ்கரணி குளக்கரையில் வராகர் கோயில் உள்ளது.  கருவறையில் பூமிதேவியை மடியில் தாங்கிய நிலையில் இவர் காட்சியளி க்கிறார். இவரே திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருமலையில் இடம் கொடுத்தவர் என்று தலபுராணம் கூறுகிறது. இதனால் இவ்வூரை “வராக க்ஷேத்திரம்” என்பர். வராகருக்கு நைவேத்யம் படைத்து அறிவிப்பு மணி ஒலித்த பிறகே, வெங்கடாஜல பதிக்கு நைவேத்யம் படைக்கப்படும். ஆதிவராகரை தரிசித்த பிறகே, ஏழுமலை யானை தரிசிக்க வேண்டும் என்பது மரபு. ஞானப்பிரான் என்னும் பெயர் கொண்ட இவரை தரிசித்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !