தினமும் கடன் எகிறுது
தன் கல்யாணத்திற்காக குபேரனிடம் 14 லட்சம் தங்க நாணயங்களைக் கடனாக வாங்கியதால் ஏழுமலையானை “பெரிய கடனாளி” என்பர். இதற்கான கடன் பத்திரத்தையும் குபேரனுக்கு எழுதிக் கொடுத்தார். இந்த பத்திரத்தில் பிரம்மா, சிவன், அரச மரத்தின் அபிமான தேவதை ஆகிய மூவரும் சாட்சி கையெழுத்து இட்டனர். இந்த கடன் மட்டுமில்லாமல் இன்னொரு கடனும் ஏழுமலையானுக்கு தினமும் ஏறிக் கொண்டேயிருக்கிறது. “கோவிந்தா” என்ற திருநாமத்தை ஒருமுறை சொன்னால் கூட போதும். உடனே அந்த பக்தருக்கு ஏழுமலையான் கடன்பட்டவராகி விடுகிறார். தினமும் லட்சக்கணக்கில் திருமலை எங்கும் கோவிந்த நாமம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதனால் ஏழுமலையான், உலகிலேயே பெரிய கடனாளியாக இருக்கிறார்.
ஒரு நாள் மட்டும் மன்னர் மத்வாச்சாரியார் என்னும் மகானின் வழியில் வந்தவர் வியாசதீர்த்த பாத உடையார். இவர் திருப்பதியில் 12 ஆண்டுகள் தங்கி வெங்கடேசப் பெருமாளை வழிபட்டு வந்தார். ஒருபவுர்ணமி நாளில் “குஹூ யோகம்” என்னும் கிரகச்சேர்க்கை உண்டாவதால், நாடாளும் மன்னனின் உயிருக்கு ஆபத்து உண்டாகும் என்று அறிந்து தகவல் சொன்னார். மன்னன் மிகவும் வருந்தினான். ராஜாவாக பதவியில் இருந்தால் தானே ஆபத்து நேரும் என்பதால், அந்த பவுர்ணமியன்று மன்னனை நீக்கி விட்டு, தானே ஆட்சி செய்ய முடிவெடுத்தார். தன் தவசக்தியால் மன்னனுக்கு தீங்கு வராமலும் தடுத்தார். மன்னராக ஒருநாள் இருந்ததால், வியாசராஜா என்ற சிறப்பு பெயரும் பெற்றார். பூமாலை சூடும் வேளை திருப்பதி மூலவருக்கு தினமும் அதிகாலையில் யமுனாத்துறை என்ற இடத்தில் இருந்து பெருமாளின் தோளில் அணிவிக்கும் மாலை (தோமாலா) பூலாங்கி (பூவால் செய்த ஆடை) எடுத்து வரப்படும். இதனை ஜீயங்கார், ஏகாங்கி என்பவர்கள் கூடையில் சுமந்து வருவர். இவர்கள் முன் முரசு அறைந்த படி ஒருவர் செல்வார். ஜீயங்காரைத் தொடர்ந்து பள்ளியெழுச்சி பாட, திருப்பாவை பாட, புருஷ சூக்த மந்திரம் ஜபிக்க எனஆறு அர்ச்சகர்கள் பின் தொடர்வர்.கருவறையில் உள்ள அர்ச்சகர் முதலில் பெருமாளின் திருமார்பில் உள்ள மகாலட்சுமி தாயாரை பூச்சரத்தால் அலங்கரிப்பார்.பின் தோமாலையும்,
பூலாங்கியும் பெருமாளுக்கு சாத்தப்படும்.