உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமலை ஏழுமலையானுக்கு தங்க தாமரை நன்கொடை

திருமலை ஏழுமலையானுக்கு தங்க தாமரை நன்கொடை

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு, ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க தாமரை, நன்கொடையாக வழங்கப்பட்டது.திருப்பதி, திருமலை ஏழுமலையானுக்கு, கர்நாடகா மாநிலம், பெங்களூரை சேர்ந்த நகை வியாபாரி, சுனில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்க தாமரையை, நேற்று நன்கொடையாக வழங்கினார். காலை, சுப்ரபாத சேவையில், ஏழுமலையானை தரிசிக்க சென்ற அவர், இதை தேவஸ்தான அதிகாரிகளிடம் அளித்தார்.இதை, தேவஸ்தான அதிகாரிகள், ஏழுமலையான் பாதத்தில் சமர்பித்தனர். ஏழுமலையானுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், எட்டு இதழ்கள் அடங்கிய, 108 தங்க தாமரை மலர்களால், அஷ்டதளபாதபத்மாராதனை என்ற சேவை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !