யோக நரசிம்மர் திருவீதியுலா
ADDED :2793 days ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் பிரமோற்சவத்தின் இரண்டாம் நாளில், கரிவரதராஜ பெருமாள், சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரியநாயக்கன்பாளையம் கரிவரதராஜ பெருமாள் பிரமோற்சவ விழாவையொட்டி, தினந்தோறும் மாலை, 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம், கோவிலில் இருந்து சிம்மவாகனத்தில் யோக நரசிம்மராக எழுந்தருளிய கரிவரதராஜ பெருமாள், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.