உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கும்பகோணம் கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்

கும்பகோணம் கோயில்களில் திருக்கல்யாணம் கோலாகலம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகம்பட்ட விஸ்வநாதர் கோவிலில், பங்குனி உத்திர விழா நடைபெற்று வருகிறது. விழாவில் இன்று திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் கம்பட்ட விஸ்வநாதர் சமேத ஆனந்தவள்ளி அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இதேபோல், கும்பகோணம் கொட்டையூர் கோடீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது, சிறப்பு அலங்காரத்தில் பந்தாடுநாயகி அம்பாள் மற்றும் கோடீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் சீர்வரிசையோடு கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !