உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காவேரிப்பட்டணம் அருகே புதர் மண்டிய பழங்கால சிற்பங்கள்

காவேரிப்பட்டணம் அருகே புதர் மண்டிய பழங்கால சிற்பங்கள்

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த, பென்னேஸ்வரமடத்தில், கிரிவல பாதையில் உள்ள, பழங்காலத்து சிற்பங்கள் புதர் மண்டியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த, பென்னேஸ்வரமடத்தில், தென்பெண்ணை ஆற்றங்கரையில், சோழர் காலத்தில் கட்டப்பட்ட, பென்னேஸ் வரரர் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே உள்ள, மலையை சுற்றி, பவுர்ணமியில் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இங்கு, கிரிவலப் பாதையில், பழங்காலத்து கற்சிற்பங்கள், 25க்கும் மேற்பட்ட இடங்களில், உள்ளது. குறிப்பாக, போரில் இறந்த வீரர்களின் நினைவாக, பல இடங்களில் நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள சிற்பங்களுக்கு, மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, மக்கள் கடவுளாக வழிபட்டு வருகின்றனர். சில ஆண்டுகளாக, கிரிவல பாதையில் உள்ள, சிற்பங்கள் புதர் மண்டியுள்ளது. பென்னேஸ்வரமடம் கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு, வெளிமாநிலத்தில் இருந்தும், பக்தர்கள் வருவதால், அதில் வரும், வருமானத்தை கொண்டு, கிரிவலப்பாதையில் புதர்கள் அகற்றி, பழங்காலத்து சிற்பங்களை பாதுகாக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !