ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் சேர்த்தி சேவை
திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும், நம்பெருமாள் - தாயார் சேர்த்தி சேவையை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, குளிர் சாதன வசதி செய்யப்பட்டுள் ளது.குளிர் சாதனங்கள்இது குறித்து, கோவில் இணை ஆணையர், ஜெயராமன் கூறியதா வது:திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், (மார்ச்,30) மாலை, 3:30 மணி முதல், நம்பெருமாள் - ரெங்கநாயகி தாயார் சேர்த்தி சேவை நடைபெற உள்ளது. கோடை காலத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையின் போது, வெப்பத்தின் தாக்கம் காரணமாக, வயதான பக்தர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர்.அதனால், பக்தர்கள் வசதிக்காக, கடந்த ஆண்டு, முதல் முறையாக, சேர்த்தி சேவை தரிசனத்துக்கு, தாயார் சன்னதிக்கு, பக்தர்கள் வரிசையில் செல்லும் பகுதியில், குளிர் சாதன வசதி செய்யப்பட்டது.அதே போல, இந்த ஆண்டும், (மார்ச்,30) நடைபெறும், சேர்த்தி சேவை தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, தாயார் சன்னதி, முன் மண்டபத்தில் இருந்து, சேர்த்தி சேவை மண்டபம் வரை, 5 டன் திறன் கொண்ட, 12 குளிர் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.நேரடி ஒளிபரப்புஓரிடத்தில் மிகப் பெரிய ஏர் கூலரும், தாயார் சன்னதி, முன் மண்டபத்தில், 30 மின் விசிறிகளும் பொருத்தப்பட்டுள்ளன. தன்வந்திரி சன்னதி, கம்பர் மண்டபம் அருகில் பிரமாண்ட திரையில், சேர்த்தி சேவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.