உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் திருக்கல்யாணம்

பழநியில் திருக்கல்யாணம்

பழநி: பழநி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திர விழா மார்ச் 24ல் ஏப்.,2 வரை நடக்கிறது. நேற்று திருக்கல்யாணத்தை முன்னிட்டு முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் காலையில் தந்தப்பல்லக்கில் கிரிவீதிகளில் வலம் வந்தார். நேற்றிரவு திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துகுமாரசுவாமி, வள்ளி, தெய்வானையுடன் வெள்ளித்தேரில் கிரிவீதியில் உலாவந்து அருள்பாலித்தார்.இன்று பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். மாலை 4.45மணிக்கு கிரிவீதியில் தேரோட்டம் நடக்க உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !