சபரிமலையில் இன்று (மார்ச்,30) ஆராட்டு
ADDED :2794 days ago
சபரிமலை, : சபரிமலையில் உள்ள பம்பையில், இன்று(மார்ச்,30) ஆராட்டு நடக்கிறது. அதன் பின், இரவு நடை அடைக்கப்படும்.கேரளாவில் உள்ள, பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலில், 21ல், கொடியேற்றத்துடன், பங்குனி உத்திர ஆராட்டு விழா துவங்கியது. (மார்ச்,29) இரவு, அத்தாழபூஜைக்கு பின், சுவாமி, சரங்குத்திக்கு பள்ளி வேட்டைக்காக எழுந்தருளினார். நள்ளிரவில் பள்ளிவேட்டை முடிந்து, பவனி சன்னிதானம் திரும்பியது. (மார்ச்,30) அதிகாலை நடை திறந்ததும், சுவாமியை கோவிலுக்குள் ஆவாகிக்கும் சடங்கு நடக்கும்; தொடர்ந்து பூஜைகள் துவங்கும். பகல், 12:00 மணிக்கு, பம்பையில் ஆராட்டு நடக்கிறது. மாலையில், சுவாமி சன்னிதானத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கும். இரவு சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு, நடை அடைக்கப்படும்.