உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் பங்குனி உத்திரப் பெருவிழா வழிவிடு முருகன் கோயிலில் கோலாகலம்!

ராமநாதபுரம் பங்குனி உத்திரப் பெருவிழா வழிவிடு முருகன் கோயிலில் கோலாகலம்!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோயிலில் , பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பால்குடம், காவடிகளுடன் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா, மார்ச் 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு தீபாராதனை, அபிஷேகம், அர்ச்சனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகன் அருள்பாலித்தார். முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர விழா இன்று நடைபெற்றது. அதிகாலை முதல் நொச்சிவயல் ஊரணியில் இருந்து பக்தர்கள் தங்களது கண்ணம் மற்றும் முகத்தில் அலகு குத்தி, காவடி, பால்குடங்கள் சுமந்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். தனியார் அமைப்புகள் சார்பில் வழிநெடுக ஆங்காங்கே நீர், மோர் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !