உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வருகை

ஸ்ரீவில்லிபுத்தூரில், ஆண்டாளுக்கு திருப்பதி பட்டு வருகை

ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (மார்ச் 30) மாலை நடக்கும் திருக்கல்யாணத்தில், ஆண்டாளுக்கு சாற்றுவதற்காக, திருப்பதி கோயில் சார்பில் பட்டு வஸ்திரம் மற்றும் மங்கலபொருட்கள் கொண்டு வரப்பட்டன.இதை, (மார்ச் 29) காலை 10:20 மணிக்கு திருப்பதி கோயில் பேஷ்கார் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் கொண்டு வந்தனர். கோயில் யானை முன்செல்ல, மாடவீதிகளை சுற்றி வந்த பட்டு மற்றும் மங்கலபொருட்களை செயல் அலுவலர் நாகராஜன், வேதபிரான் சுதர்சன், ஸ்ரீவாரிபிரபு, மணியம் ஸ்ரீராம், கோபி, ஸ்தானிகம் ரமேஷ் பெற்றனர்.இன்று (மார்ச் 30) மாலை 6:35 மணிக்கு, ஆடிப்பூர பந்தலில் நடக்கும் ஆண்டாள் திருக்கல்யாணத்தின்போது, ஆண்டாளுக்கு இந்த பட்டு சாற்றப் படுகிறது. ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல்அலுவலர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !