உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூரில் சுவாமி வாகனங்கள் ஆந்திராவுக்கு பயணம்

தஞ்சாவூரில் சுவாமி வாகனங்கள் ஆந்திராவுக்கு பயணம்

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்ட சுவாமி வீதி உலா வாகனங்கள், ஆந்திரா மாநிலத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு, (மார்ச் 29) அனுப்பி வைக்கப்பட்டன.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பொரூட்டூர் பெண்ணா நதிக்கரையில், முக்தி ராமலிங்கேஸ்வரா கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இக்கோவிலில், ரதசப்தமி பிரமோற்சவத்தின் போது, 10 நாட்களிலும், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும்.சுவாமி வீதி உலாவுக்கு, மரத்தால் செய்யப்பட்ட யானை, மயில், ரிஷபம், நாகாபரணம் உள்ளிட்டவைகள் பயன்படுத்த ப்பட்டன. தற்போது, கோவில் கமிட்டி சார்பில், நன்கொடையாளர்கள் மூலம், மூன்று லட்சம் ரூபாய் செலவில், வெண்கலத்தால்லான வீதி உலா வாகனங்கள் வடிவமைக்கப்பட்டன. கும்ப கோணத்தில் உள்ள விஸ்வகர்மா சிற்ப கூட ஸ்தபதி சண்முகம் வடிமைத்து கொடுத்த யானை, மயில், ராவணன், திருவாட்சி, நந்தி, நாகாபரணம், சேஷவாகனம், ஹம்சவாகனம் ஆகியவை, நேற்று ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

(மார்ச் 30) அதிகாலை நடை திறந்ததும், சுவாமியை கோவிலுக்குள் ஆவாகிக்கும் சடங்கு நடக்கும்; தொடர்ந்து பூஜைகள் துவங்கும். பகல், 12:00 மணிக்கு, பம்பை யில் ஆராட்டு நடக் கிறது. மாலையில், சுவாமி சன்னிதானத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி நடக்கும். இரவு சன்னி தானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு, நடை அடைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !