கோவில் யானைகளுக்கு வாரம் தோறும் பரிசோதனை
கோவில் யானைகளுக்கு வாரம் தோறும் பரிசோதனை நடத்துவது உட்பட, பல்வேறு மாற் றங்களை ஏற்படுத்த, அறநிலையத் துறைமுடிவெடுத்துள்ளது. திருவண்ணாமலை கோவில் யானை ருக்கு, 30, மார்ச், 21ல் இறந்தது. புத்துணர்வு முகாமில் தொடர்ந்து பங்கேற்ற ருக்கு, சராசரி வயதில் பாதியை கடக்காத நிலையில் இறந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, கோவில் யானைகள் விஷயத்தில், அறநிலையத் துறைசிறப்புக்கவனம் செலுத்த துவங்கியுள்ளது.இதுதொடர்பாக, அறநிலையத் துறை பிறப்பித்துள்ள உத்தரவு: திருவண்ணா மலை கோவில் யானை இறந்ததை, ஆன்மிகவாதிகள் அபசகுணமாக கருதுகின்றனர்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில் யானைகளின் உடல் நலன் குறித்து, கால்நடை பராமரிப்புத் துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூட்டாக ஆய்வு செய்து, உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற் கிடையில், யானைகளை கோவில்களில் பயன்படுத்துவதில், தற்போது பின்பற்றப்படும் நடை முறையில், அதிரடி மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இது குறித்து, அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியதாவது:கோவில் யானைகளின் உடல் நலத்தை பாதுகாக்க, தனிக்குழு செயல்பட்டு வருகிறது. யானைகள், பக்தர்களுக்கு ஆசி வழங்கும் நேரத்தை குறைத்து, ஓய்வு நேரத்தை அதிகப்படுத்துவது; வாரந்தோறும் மருத்துவ பரிசோதனை செய்வது போன்ற நடை முறைகள் பின்பற்றப்பட உள்ளன.அதிகமான கூட்டம், ஒலி மற்றும் ஒளி நிறைந்த விழாக் கள், உற்சவங்களில், கோவில் யானைகளை ஊர்வலமாக அழைத்துச் செல்வதை முடிந்த வரை தவிர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.