உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் இன்று 30ம் தேதி சஹஸ்ர சங்காபிஷேகம்

புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவிலில் இன்று 30ம் தேதி சஹஸ்ர சங்காபிஷேகம்

புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் சஹஸ்ர சங்காபிஷேக விழா இன்று 30ம் தேதி நடக்கிறது.மணக்குள விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்து, மூன்றாமாண்டு சஹஸ்ர சங்கா பிஷேக விழா, விக்னேஸ்வர பூஜையுடன் 29ம் தேதி மாலை துவங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், முதல் கால யாக பூஜை நடந்தது.

இன்று 30ம் தேதி காலை 8:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. மதியம் 12:15 மணிக்கு, மணக்குள விநாயகருக்கு கலசாபிஷேகம், 1008 சங்காபிஷேகம், உற்ச வமூர்த்திக்கு 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

இதைதொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, உற்சவமூர்த்தி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !