உடுமலை, மாரியம்மன் கோவிலில் இன்று (மார்ச் 30)ல், கொடியேற்றம்
ADDED :2794 days ago
உடுமலை:உடுமலை, மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா, ஏப்., 5ம்தேதி நடக்கிறது. கடந்த 20ல் நோன்பு சாட்டப்பட்டது. 27ல் சிறப்பு பூஜையுடன் திருக்கம்பம் நடப்பட்டது. பக்தர்கள், கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றிச் செல்கின்றனர்.திருவிழாவில் இன்று (மார்ச் 30)ல், மதியம் 12:30 மணிக்கு திருக்கொடியேற்றப்படுகிறது. பகல் 2:00 மணிக்கு பூவோடு நிகழ்வும் ஆரம்பமாகிறது. மாலையில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி குட்டைத்திடலில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.