உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூரில் உலக நன்மைக்காக நட்சத்திர பூஜை நடத்திய பெண்கள்

கரூரில் உலக நன்மைக்காக நட்சத்திர பூஜை நடத்திய பெண்கள்

கரூர்: உலக நன்மைக்காக, வாசவி மகிளா மண்டல சார்பில், 27 நட்சத்திர ங்களுக்கு பெண்கள் பூஜை நடத்தினர். கரூர், வாசவி திருமண மண்டபத்தில், வாசவி மகிளா மண்டலியின் ஆறாவது சங்கத்தின் சார்பில், உலக நன்மைக்காக குபேர லட்சுமி விக்ரகம் அமைக்கப்பட்டு, அதன் முன், 27 நட்சத்திரங்களுக்கு ஏற்ப கோலம், நட்சத்திரத்திற்கான கடவுள், நட்சத்திரத்தி ற்கான மரம் அமை க்கப்பட்டு, தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. நாட்டில் மழை வேண்டியும், உலக அமைதிக்காக வும் நட்சத்திர பூஜையை பெண்கள் நடத்தினர். வாசவி மகிளா மண்டலி சங்கத் தலைவர் மஞ்சு ரமேஷ் தலைமையில் பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !