உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை தெப்பக்குளத்தில் 30 ஆண்டுக்கு பின் உற்சவம்

குளித்தலை தெப்பக்குளத்தில் 30 ஆண்டுக்கு பின் உற்சவம்

குளித்தலை: குளித்தலை அடுத்த, சத்தியமங்கலம் பஞ்., அய்யர்மலையில், இந்து சமய அறநி லைய துறை கட்டுப்பாட்டில் உள்ள, சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வர் கோவிலுக்கு சொந்தமான, குளித்தலை பரிசல் துறை ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் அருகிலுள்ள தெப்பக் குளம், 30 ஆண்டுகளாக பயன்படுத்தாமல், முற்செடிகள் வளர்ந்திருந்தது. அப்போதைய கலெக் டர் கோவிந்தராஜ் அனுமதியுடன், தெப்பக்குளம் தூர் வாரும் பணி நடந்தது. கடந்த, 15 நாட்களாக இரண்டு மின் மோட்டார்களுடன், குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. இன்று30ல்  இரவு, 7:00 மணிக்கு குளத்தில் தெற்போற்சவம் நடைபெற உள்ளது. தெப்பஉற்சவ விழாவில் கலெக்டர் மற்றும் இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், தெப்ப குளம் தூர்வாரும் பணிக்கு உதவிய புரவலர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !