குன்னூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2795 days ago
குன்னூர்:குன்னூர் முட்டிநாடு கோலனிமட்டம் கற்பக விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.இதனையொட்டி விநாயகர் பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜை, 2ம் கால யாக பூஜை, கலச ஊர்வலம், கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், சிறுவர், சிறுமியருக்கான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களை சேர்ந்த ஏராளமா னோர் பங்கேற்றனர்.விழா ஏற்பாடுகளை ஊர் தலைவர் புஷ்பராஜ், திருப்பணி குழுவினர், இளை ஞர், மாதர், சிறுவர் அணியினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.