ஈரோட்டில் மஹாவீர் ஜெயந்தி ஊர்வலம்
ADDED :2795 days ago
ஈரோடு: மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, ஜைன மதத்தினர், அன்பு, அகிம்சையை வலியுறு த்தி, ஈரோட்டில் ஊர்வலம் சென்றனர். மஹாவீர் ஜெயந்தி, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. ஈரோடு இந்திரா நகரில் உள்ள ஜெயின் கோவிலில், ஜைன மதத்தினர் ஒன்று திரண்டனர். ஊர்வ லமாக கிளம்பி இந்திரா நகர், ஆர்.கே.வி. ரோடு, மணிகூண்டு, அக்ரஹாரம் வழியே மீண்டும் கோவிலை அடைந்தனர். அன்பு, அகிம்சை, உயிர்களை கொல்வதற்கு தடையை வலியுறுத்தி, துண்டு பிரசுரம் வினியோகித்தனர்.
* விஜயமங்கலம், மேட்டுப்புதூரில் உள்ள, சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஈரோடு, திருப்பூர் மாவட்ட ஜெயின் சமூகத்தினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மஹாவீரர் சிலைக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.