சிவகிரி அருகே நூதன விழா தீப்பந்த வெளிச்சத்தில் தேரோட்டம்
கொடுமுடி: சிவகிரி அருகே, தீப்பந்த வெளிச்சத்தில், பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். சிவகிரி அருகே, கொல்லன்கோவிலில் பிரசித்தி பெற்ற செல்லாண்டி யம்மன் உள்ளது. இங்கு தேர்த்திருவிழா கடந்த, 20ல் பூச்சாட்டுதலுடன் தொடங் கியது. இதையடுத்து நாள்தோறும், அம்மனுக்கு அபிஷே கம், ஆராதனை நடந்தது. கடந்த, 28ல் பொங்கல் விழா, மாவிளக்கு பூஜை நடந்தது. (மார்ச் 28)ல் இரவு, கோவில் வளாகத்தில், குதிரைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை செய்தனர். பட்டு வஸ்திரம் அணிவித்து, குதிரை துலுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.
இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் இருந்த உற்சவர் சிலையை தேரில் வைத்து, நள்ளிரவு, 11:30 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்பட்டது. மின் விளக்குகள் அணைக்கப்பட்டு, தீப்பந்த வெளிச்சத்தில் தேரோட்டம் நடந்தது. இதற்காக தேர் செல்லும் வழியில், பக்தர்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பிடித்து, வழிகாட்டினர்.