கொடுமுடி ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம்
ADDED :2795 days ago
கொடுமுடி: ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கொடுமுடி அருகே, ஊஞ்சலூர் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. (மார்ச் 29)ல் காலை, ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து , அலகு குத்தி ஊர்வலமாக வந்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை, 6:00 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஊஞ்சலூர், வள்ளியம்பாளையம், மணிமுத்தூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள், தேர் வடம் பிடித்து இழுத்து வந்தனர். (மார்ச் 30)ல் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.