பு.புளியம்பட்டியில் மழை வேண்டி தவம்; மந்திரங்கள் ஓதி ஜெபம்
ADDED :2795 days ago
பு.புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளான, நல்லூர், புங்கம்பள்ளி, விண்ணப்பள்ளி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில், கடந்த ஆண்டு பருவமழை சராசரியை விட குறைவாக பெய்தது. கடந்த ஒரு மாதமாக வெயில் கொளுத்துகிறது. நடப்பாண்டும் போதிய மழை பெய்யாததால், நல்லூர், புங்கம்பள்ளி குளம் வறண்டு கிடக்கிறது. இந்நிலையில், மழை வேண்டி, நல்லூர் மக்கள் சார்பில், கரியகாளியம்மன் கோவிலில், (மார்ச் 28) காலை, யாக குண்டம் அமைத்து, பஞ்சபூத வேள்வி நடந்தது. அதை தொடர்ந்து,வழிபாட்டு குழுவினர், 108 மந்திரங்கள் ஓதி சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் திருப்பூர் மாவட்டம், வரகுட்டப்பாளையம், பஞ்சபூத பயிற்சி மைய ஆசான் ஓம் சிங் சிங் வாயூ ஜீ, மழை வேண்டி, தவம் மேற்கொண்டார். பயிற்சி மைய மாணவர்கள், மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.