உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா

நாமக்கல்: நாமக்கல், கருப்பட்டிபாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 13ல் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் பூவோடு வழிபாடு நடந்தது. (மார்ச் 28)ல்   இரவு மா விளக்கு பூஜை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை பொங்கல் பூஜை மற்றும் கிடாவெட்டுதல், பக்தர்கள் காட்டேரி வேடம் அணிந்து மஞ்சள் நீர் வைபம் ஆகியவை நடந்தன. ஏற்பாடுகளை ஊர் மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !