உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மல்லசமுத்திரம் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30) தேரோட்டம்

மல்லசமுத்திரம் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30) தேரோட்டம்

மல்லசமுத்திரம்: மல்லசமுத்திரம் ஒன்றியம், வையப்பமலையில் மலை குன்றின்மீது, முருகன் கோவில் அமைந்துள்ளது. (மார்ச் 30) பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மார்ச் 28) நள்ளிரவு, சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று 30ல் காலை, 9:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட சிறியதேரில், மலையைச் சுற்றி, விநாயகர் சுவாமி வலம் வருகிறார். தொடர்ந்து, 11:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடக்கவுள்ளது. மாலை, 4:30 மணிக்கு, திருத்தேர் வடம்பிடிக்கப்பட்டு, கோவிலைச் சுற்றி வலம் வர உள்ளது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !