தர்மபுரியில் வளர்பிறை பிரதோஷம்: சிவன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :3120 days ago
தர்மபுரி: வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு, தர்மபுரி மாவட்ட சிவன் கோவில்களில், (மார்ச் 29) சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடந்தது. தர்மபுரி நெசவாளர் காலனி ஸ்ரீ மகாலிங்கேஸ்வ ரர் கோவில் பிரகாரத்தில் உள்ள, நந்தி பகவானுக்கு, மாலை, 5:00 மணிக்கு, பால், பன்னீர், தேன், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட, பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தன. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், கடைவீதி மருதவானேஸ்வரர் கோவில், ஹரிஹரநாதசுவாமி கோவில்தெரு ராமலிங்க சவுடேஸ்வரர் கோவில், ஒட்டப்பட்டி ஆதிலிங்கேஸ்வரர் கோவில் உள்பட பல்வேறு சிவன் கோவில்களில், வளர்பிறை பிரதோஷத் தை முன்னிட்டு, (மார்ச் 29), சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் நடந்தது.