குமாரபாளையம் பாலசெல்வகுமரன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை
ADDED :2795 days ago
குமாரபாளையம்: பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பாலசெல்வகுமரன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. குமாரபாளையம், ராஜாஜி நகர் பாலசெல்வகுமரன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா, கடந்த, 28ல் துவங்கியது. சக்தி மாரியம்மன் கோவிலில் சிறப்பு கட்டளை பூஜை நடந்தது. (மார்ச் 29), உலக அமைதி, மழை வளம், கல்வி, செல்வ வளம் வேண்டி, 108 திருவிளக்கு பூஜை நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பெண்கள் பெருமளவில் பங்கேற்று வழிபாடு நடத்தினர். பிரசாதம் மற்றும் பொங்கல் வழங்கப்பட்டது. (மார்ச் 29),, காவிரி ஆற்றிலிருந்து, காவடி திருவீதி, அன்னதானம் நடைபெற உள்ளது.