உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிள்ளை அருகே பின்னத்தூரில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு

கிள்ளை அருகே பின்னத்தூரில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு

கிள்ளை: கிள்ளை அருகே பின்னத்தூர் பர்வத வதனி சமேத ராமநாதேஸ்வரர் திருக்கோவிலில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்த போது பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.

கிள்ளை அருகே பின்னத்தூர் பர்வத வதனி சமேத ராமநாதேஸ்வரர் திருக்கோ வில் உள்ளது. இக்கோவிலில்ஆண்டு தோறும் மார்ச் மாதம் கடைசி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் மாலை 6.00 மணியில் இருந்து 6.30 மணிக்குள் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அற்புத நிகழ்வு நடந்து வருகிறது.  அந்தநிகழ்வின் போது பக்தர்கள் பங்கேற்று நெய் தீபம், கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 27,28 மற்றும் 29 ம் தேதி என மூன்று தினங்கள் சூரிய ஒளி சிவலிங்கங்கத்தில் விழுந்த போது பக்தர்கள் தீபமேற்றி வழிபாடு நடத்தினர்.

கிள்ளை அருகே பின்னத்தூர் பர்வத வதனி சமேத ராமநாதேஸ்வரர் கோவிலில் வள்ளிதேவ சேனா சுப்ரமணயர் மற்றும் பாம்பன் சுவாமிகளுக்கு காலையில் இருந்து சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. அதன் பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போன்று மானம்பாடி ஸ்ரீ முருகன் கோவில், தில்லை விடங்கன் புற்று மாரியம்மன், விடங்கேஸ்வரர், கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் முனீஸ்வரர் கோவில் என சுற்றுபகுதி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும்  அன்னதான நிகழ்ச்சி நடந்தது.

பக்தர்கள்  அதிகளவில் பங்கேற்று காவடி எடுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !