சென்னையில் இருந்து திருப்பதிக்கு அதிகாலை ரயில் இயக்க கோரிக்கை
திருவள்ளூர் : சென்னையில் இருந்து, திருப்பதிக்கு, அதிகாலை ரயில்கள் இயக்க வேண்டும் என, ரயில்வே துறையினருக்கு, பயணியர் சங்கத்தினர் மனு அளித்துள்ளனர்.
திருவள்ளூர் ரயில் பயணியர் சங்கத்தின் சார்பில், தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தெற்கு ரயில்வே சார்பில், சென்னையில் இருந்து, திருப்பதிக்கு மூன்று விரைவு ரயில்களும், மூன்று புறநகர் மின்சார ரயிலும் இயக் கப்படுகிறது.இந்த ரயில்களில், தினமும், திருப்பதி செல்லும் பக்தர்கள் அதிகளவில் பயணி க்கின்றனர். அதிகாலை, 6:45 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் புறப்படும் சதாப்தி விரைவு ரயில், திருப்பதிக்கு, 9:45 மணியளவில் சென்றடைகிறது.
அங்கிருந்து பக்தர்கள், திருமலைக்கு செல்ல, 11:30 மணியாகி விடுகிறது. அதன் பின், தரிசனம் முடித்து, வீடு திரும்ப இரவு அல்லது மறுநாள் ஆகி விடுகிறது. மேலும், அதிகாலை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் அன்றிரவு தங்க வேண்டி உள்ளது.
எனவே, பக்தர்கள் ஒரே நாளில் அதிகாலை தரிசனம் செய்யும் வகையில், சென்னை சென்ட் ரலில் இருந்து, அதிகாலை 3:45 மணியவில், புறநகர் மின்சார விரைவு ரயிலை இயக்க வேண் டும்.
அவ்வாறு இயக்கினால், பக்தர்கள், திருமலைக்கு, காலை 8:30 மணியளவில் சென்று, உடன டியாக தரிசனம் செய்ய ஏதுவாக இருக்கும். இந்த கோரிக்கையினை பரிந்துரை செய்ய வேண் டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.