காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோவில் சிலை குளத்தில் தேடிய வீரர்கள்
காஞ்சிபுரம் : குமரக்கோட்டம் முருகன் கோவிலில் காணாமல் போன, கச்சியப்ப சிவாச் சாரியார் வெண்கல சிலை, சர்வ தீர்த்த குளத்தில் போடப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டதால், தீயணைப்பு வீரர்கள் நேற்று தேடி பார்த்தனர்.
காஞ்சிபுரம் குமரக் கோட்டம் முருகன் கோவிலில், கந்த புராணத்தை இயற்றிய கச்சியப்பர் சிவாச்சாரியாருக்கு வெண்கல சிலை உள்ளது. 29 செ.மீ., உயரம், 18, செ.மீ., அகலம் கொண்ட அந்த சிலை, 7.47 கிலோ எடை கொண்டது. ஆண்டு தோறும், பிப்., 24ல் அவருக்கு உற்சவம் நடைபெறுவது வழக்கம். அன்று உற்சவர் சிலையை அலங்கரித்து, ராஜ வீதியை சுற்றி எடுத்து வருவர்.கடந்த மாதம் நடந்த உற்சவத்திற்கு முன், சிலை காணாமல் போனதாக கூறப்படுகி றது. கோவில் உள்பிரகாரத்தில் வள்ளி கல்யாணசுந்தரர் மண்டபத்தில் இருந்த இந்த சிலை காணாமல் போன விபரம் அறிந்த கோவில் செயல் அலுவலர், மற்ற இடங்களிலும் தேட உத்தரவிட்டார்; இருப்பினும் சிலையை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதனால், சிலை காணாமல் போனது குறித்து, கடந்த, 10ல் சிவ காஞ்சி போலீசில் செயல் அலு வலர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்ததில், கோவிலில் அர்ச்சகராக இருந்த கார்த்திக் என்பவர் தான், சிலையை எடுத்திருக்க வேண்டும் என்பது தெரிந்தது. அவரிடம் போலீசார் மேலும் நடத்திய விசாரணையில், சர்வ தீர்த்த குளத்தில் சிலையை போட்டதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து, நேற்று பகல், 3:00 மணிக்கு தீயணைப்பு வீரர்கள், குளத்தில் தேடினர். எனி னும், கண்டுபிடிக்க முடியவில்லை.