உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் பல்லக்கில் ஏகாம்பரர் உலா நாளை (மார்ச் 31)ல் திருக்கல்யாண விழா

காஞ்சிபுரம் பல்லக்கில் ஏகாம்பரர் உலா நாளை (மார்ச் 31)ல் திருக்கல்யாண விழா

காஞ்சிபுரம் : பங்குனி உத்திர திருக்கல்யாண விழாவின், ஒன்பதாம் நாள் உற்சவமான (மார்ச் 30) காலை, பஞ்சமூர்த்திகளுடன், ஆள் மேல் பல்லக்கில் ஏகாம்பரநாதர் வீதியுலா வந்தார். நாளை (மார்ச் 31)அதிகாலை, திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர திருக்கல்யாணப் பெருவிழா, 21ல், கொடி யேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.ஒன்பதாம் நாள் உற்சவமான (மார்ச் 29) காலை, பஞ்சமூர்த்திகளுடன், ஏகாம்பரநாதர், ஆள்மேல் பல்லக்கில், நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார்.

பின், மேற்கு ராஜ வீதியில் உள்ள தீபாவளி மண்டபத்தில், பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி னார். அங்கு, சிறப்பு பூஜைகள் நடந்தன. அங்கிருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தார். காஞ்சிபுரத்தில் நேற்று,(மார்ச் 29) 39 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை நிலவியபோதும், பக் தர்கள், சாலையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இன்று காலை, சபாநாதர் தரிச னம் உற்சவத்தில், ஏலவார்குழலியம்மை, ஓ.பி., குளத்திற்கு எழுந்தருளி வீதியுலா மற்றும் மண்ட கப்படி நடைபெறுகிறது. நாளை (மார்ச் 31)அதிகாலை, 5:30 மணிக்கு, பங்குனி உத்திர திருக் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !