உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விழுப்புரம் அபிராமேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூரில் உள்ள அபிராமேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா நடைபெற்றது.

பங்குனி உத்திரத்தை யொட்டி, திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் கடந்த 21ம்தேதி திருவிழா கொடியேற்றுததுடன் துவங்கியது.

இதையடுத்து, தினந்தோறும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், சந்திரபிரபை, நாகம், ரிஷபம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதனை தெடார்ந்து (மார்ச் 29) காலை 6:00 மணிக்கு, அபிராமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனையும், 8:00 மணிக்கு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அபிராமேஸ்வரர் எழுந்தருளினார்.

கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடித்து மாடவீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !