ஆர்.கே.பேட்டையில் கல்யாணராமர் திருக்கல்யாணம்
ADDED :2796 days ago
ஆர்.கே.பேட்டை : கல்யாணராமருக்கு, நேற்று, (மார்ச் 29) திருக்கல்யாணம் நடந்தது.
ஆர்.கே.பேட்டை அடுத்த, பெரிய நாகபூண்டியில் உள்ள சீதா, லட்சுமணர் உடனுறை கல்யாண ராமர் கோவிலில், ராம நவமி உற்சவம் நடந்து வருகிறது.கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல், தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நேற்று (மார்ச் 29) மாலை, சீதா தேவி உடனுறை கல்யாணராமருக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. இன்று (மார்ச் 30) இரவு, பக்தி நாடகம் நடைபெறும். ஆறு நாள் உற்சவம், இன்றுடன் நிறைவு பெறுகிறது.