உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் ஏகாதசி விழா!

லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் ஏகாதசி விழா!

காரிமங்கலம்: காரிமங்கலம் அக்ரஹாரம் ஸ்ரீ லட்சுமி நாராயண ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (ஜன., 5) நடக்கிறது. காரிமங்கலம் கடைவீதி அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், விழா கட்டளைதாரர் டாக்டர் பன்னகசைனம், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* தர்மபுரி கோட்டை வரமகாலட்சுமி சமேத பரவாசுதேவ ஸ்வாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. 10 ஆயிரம் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது.மேலும் பக்தர்கள் சார்பில் காலை முதல் மாலை வரை பல்வேறு பிரசாதங்கள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர். வரும் 6ம் தேதி துவாதசியை முன்னிட்டு கோட்டை யாதவ சமூகத்தின் சார்பில் சிறப்பு பூஜையும் மற்றும் ஸ்ரீ வாரிசேவா குழுவின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

* தர்மபுரி அடுத்த ஆட்டுகாரன்பட்டி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், சொர்க்கவாசல் திறக்கும் நிகழச்சியும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

* காவேரிப்பட்டணம் அடுத்த ஐகொந்தம் கொத்தப்பள்ளி ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்வாமிக்கு நாளை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகளும், சொர்க்கவாசல் திறப்பும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !