உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்

திருக்காமீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம்

வில்லியனூர் : வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்றது. வில்லியனூர் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவிலில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெற்று வருகிறது. 4ம் நாள் உற்சவமான நேற்று காலை மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து நடராஜர் - சிவகாமசுந்தரி ஆகியோர் மதுரை மீனாட்சி சொக்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் மனோகரன் மற்றும் சிவாச்சாரிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !