உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடி கோயில் பங்குனி உத்திர விழா

குன்றக்குடி கோயில் பங்குனி உத்திர விழா

காரைக்குடி:குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. உத்திரவிழாவின் கடைசி நாளான நேற்று (மார்ச் 30)ல் பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதியம் 12:15 மணிக்கு மேல் சுவாமி தீர்த்தமாடும் உத்திரம் தீர்த்தவிழா நடந்தது. இரவு 8:00 மணிக்கு மயிலாடும் பாறைக்கு சுவாமி எழுந்தருளலும், அதை தொடர்ந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சியும் நடந்தது. ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார்.

சிங்கம்புணரி:- சிங்கம்புணரி அருகே கண்ணமங்கலப்பட்டியில் பட்டத்தரசி அம்மன் கோவில் பங்குனி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று(மார்ச் 30)ல் பால்குட விழா நடந்தது. கோவில் மந்தையிலிருந்து ஏராளமான பக்தர்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து வந்து கோயிலை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. இரவு பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் அம்மனை வழிபட்டனர். இதில் ஏராளமான பக்தர்களர் பங்கேற்றனர்.

மானாமதுரை: மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான்வள்ளி,தெய்வானையுடன் மயில் வாகனத்தில் கோயில் மண்டபத்தில் எழுந்தருளினர்.அங்கு சிறப்பு யாகங்கள் அபிஷேக,ஆராதனைகள் நடைபெற் றன. பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்துவந்து அபிஷேகம் செய்தனர்.

*அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில்,ஆனந்தவல்லி அம்மன் கோயில், இடைக்காட்டூர், கால்பிரவு ஆகிய முருகன் கோயில்களில்பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது. விழாக் களில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !