பண்ணாரியம்மன் குண்டம் விழாவுக்கு நடந்து வந்த கர்நாடகா மாநில பக்தர்கள்
ADDED :2791 days ago
பண்ணாரி: பண்ணாரியம்மன் குண்டம் விழாவில் தீ மிதிக்க, கர்நாடகாவில் இருந்து, பக்தர்கள் நடந்து வந்தனர். சத்தியமங்கலத்தை அடுத்த, பிரசித்தி பெற்ற பண்ணாரியம்மன் கோவில், குண்டம் விழா, ஏப்.,2, 3ல் நடக்கவுள்ளது. விழாவில், தமிழகம் மட்டுமின்றி, கர்நாடகா மாநில பக்தர்களும் பங்கேற்பர்.
லட்சக்கணக்கானோர் தீ மிதிப்பர். இந்நிலையில், கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர், கொள்ளே கால், குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு, மைசூரு மற்றும் பெங்களூரு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். மைசூரிலிருந்து மூன்று நாட்களுக்கு முன், பாதயாத் திரையாக பக்தர்கள், திம்பம் மலைப்பாதை வழியாக வந்து, நேற்று கோவிலை அடைந்தனர்.