திருத்தளிநாதர் கோயிலில் அறுபத்து மூவர் குருபூஜை
ADDED :2787 days ago
திருப்புத்துார்;திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் அறுபத்து மூவர் நாயன்மார்களுக்கு குருபூஜை நடந்தது.காலையில் நடராஜர் சன்னதியில் 72 கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் துவங்கியதுபின்னர் பூர்ணாகுதி நடந்து கலச புறப்பாடாகிதேவஸ்தான ஆதீனகர்த்தர் குன்றக்குடி பொன்னம்பல அடிகள் முன்னிலையில் நாயன்மார்களுக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து திருஞானசம்பந்தர்,அப்பர், சுந்தரர்,மாணிக்கவாசகர்ஆகிய நால்வருக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர்நால்வர் பிரகாரவலம் வந்தனர்.