பூர்ணதேர் திருவிழா
ADDED :2787 days ago
மூங்கில்துறைப்பட்டு;மூங்கில்துறைப்பட்டு பகுதியில் நடந்த பங்குனி பூர்ணதேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தனர்.மூங்கில்துறைப்பட்டு, பிரம்மகுண்டம், வடபொன்பரப்பி, பொருவளூர், ரங்கப்பனுார், பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பங்குனி பூர்ண தேர் திருவிழா நடந்தது.பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்தல், அறிகண்டம், காவடி, பால்குடம், உரல் இழுத்தல், செக்கு இழுத்தல், ராட்டினம் இழுத்தல், அந்திரத்தில் தொங்கியபடி உரல் இடித்தல் மற்றும் தீமித்து நேர்த்திக் கடனை செலுத்தினர். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு அனைத்துகோவில்களிலும் அன்னதானம் வழங்கப் பட்டது.