சித்தலிங்கமடம் கோவிலில் நாளை தேர் வெள்ளோட்டம்
ADDED :2855 days ago
திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் அடுத்த சித்தலிங்கம டம் வியாக்ரபாதீஸ்வரர் கோவிலில்‚ புதிய தேர் வெள்ளோட்டம், நாளை நடக்கிறது. திருக்கோவிலுார் அடுத்த சித்தலிங்கமடம் கிராமத்தில்‚ பழமையான வியாக்ரபாதீஸ்வரர் கோவில் உள்ளது.கோவில் பிரம்மோத்சவ விழாவின் 9ம் நாள், வலம்வரும்தேர் பழுதடைந்து, கடந்த 15 ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறவில்லை.இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பக்தர்களன் உதவியுடன,் இதற்காக ரூ.40 லட்சம் மதிப்பில்புதிய தேர் செய்யப்பட்டது. இதற்கான வெள்ளோட்டம் நாளை (5ம்தேதி) காலை 7:30 மணிக்கு மேல்‚ 9:00 மணிக்குள் நடக்கிறது. சென்னை மாநகராட்சி கமிஷ்னர் கார்த்திகேயன் தலைமை தாங்குகிறார்.ஞானானந்தா நிக்கேதன் தலைவர் நித்யானந்தகிரி சுவாமிகள் வடம்பிடித்து, தேர் வெள்ளோட்டத்தை துவக்கி வைக்கிறார்.