பச்சமலை கோவில் மலைப்பாதை பராமரிப்பில்லாததால் பரிதவிப்பு
ADDED :2853 days ago
கோபி: கோபி பச்சமலையில், பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. படிக்கட்டுகள் மற்றும் மலைப்பாதை வழியாக, முருகனை தரிசிக்க செல்லலாம். மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல வசதியாக, பல ஆண்டுகளுக்கு முன், தார்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் பராமரிப்பை மறந்து விட்டனர். இதனால் அடிவாரம் துவங்கி, மலைக்கோவில் வரை, சாலை சேதமடைந்துள்ளது. பல இடங்களில் ஜல்லி பெயர்ந்து, திடீர் பிரேக் போட்டால், வாகனங்களை இடற வைக்கிறது. பலர் விழுந்து, எழுந்து செல்கின்றனர். மொடச்சூர் பஞ்., அல்லது கோவில் நிர்வாகம், சாலையை புதுப்பிக்க, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.