உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருப்புக்கோட்டையில் பங்குனி விழா: மண் பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

அருப்புக்கோட்டையில் பங்குனி விழா: மண் பொம்மைகள் தயாரிப்பு தீவிரம்

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு,  நேர்த்தி கடன் செலுத்த பொம்மைகள் தயாரிப்பு  பணி மும்முரமாக நடந்து வருகிறது. முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா   15 நாட்கள் நடக்க உள்ளது. இதே போன்று, ஆயிரங் கண் மாரியம்மன் கோயில் பச்ங்குனி பொங்கல் விழா அடுத்த வாரம் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பக்தர்கள் விரதம் இருந்து, பொங்கல் வைத்து, அக்கினி சட்டிகள் எடுத்து  நேர்த்தி கடன் செலுத்துவர். நேர்த்தி கடன் செலுத்துவதற்கான  பொம்மைகள் விதவிதமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொம்மைகளை களி மண்ணில் தயாரித்து, அதற்கு பல  வண்ணங்கள் பூசும்  பணி நடந்து வருகிறது. விருதுநகர், சிவகாசி பகுதிகளிலிருந்து பொம்மைகள் வாங்க இங்கு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !