உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜை

திருத்தணி; கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய் பாபா கோவில்களில், மூலவருக்கு பாலாபிஷேக உற்சவ விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு காகட ஆரத்தி நடந்தது. மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் நடந்தது. மாலையில், சந்திய ஆரத்தி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது.திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, பக்தர்கள் வழிபட்டனர். நகரி பகுதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !